திருச்சி மற்றும் மதுரை மண்டலங்களுக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த 6 மாதங்களுக்குள் பேட்டரி கார் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் நிலையில், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தராமல் இருப்பது ஏன் என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.