உணவுக்குப் பிறகு 5 நிமிடங்கள் நடப்பது கூடத் தசைகளைச் செயல்பட வைத்து, ரத்தச் சர்க்கரை அளவின் திடீர் உயர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நேரமில்லாதவர்கள் உணவுக்குப் பின் 10 நிமிடங்கள் வீதம் 3 வேளையும் நடப்பது மாவுச்சத்து உணவால் ரத்தத்தில் குளுக்கோஸ் சேர்வதைத் தடுக்கும். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் உணவுக்குப் பின் 20 நிமிடங்கள் மெதுவாக நடப்பது உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவைச் சீராகப் பராமரிக்க உதவும்.