கடந்த வார இறுதியில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய
பங்குச்சந்தை, வாரத்தின் தொடக்க நாளான இன்று (ஜூலை 27) வலுவான மீட்சியை கண்டுள்ளது. சர்வதேச அளவில் ஈரான் மற்றும்
அமெரிக்கா இடையேயான போர்ப் பதற்றம் சற்று தணிந்ததே இந்த நேர்மறையான ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 76,686 புள்ளிகளாகவும், நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 23,944 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றன.