மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) புராஜெக்ட் இன்ஜினியர், சூப்பர்வைசர் மற்றும் இந்தி மொழிபெயர்ப்பாளர் என மொத்தம் 64 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடர்புடைய துறைகளில் பட்டம் அல்லது டிப்ளோமா பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 10ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு careers.bhel.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.