திமுகவுடன் பாஜக கூட்டணியா?- நயினார் பதில்

15பார்த்தது
தமிழ்நாட்டில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கவுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்குத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (நவ.18) பேட்டியளித்த அவர், திமுகவுடன் பாஜக கூட்டணி என எந்தவித ஆதாரமும் இல்லாமல் சிலர் பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தாங்கள் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.    நன்றி:News18

தொடர்புடைய செய்தி