மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அருகே அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். செனகலின் கெபெமர் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்குக் குடிபெயரும் நோக்கில் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது, டாக்கருக்கு வடக்கே 180 கி.மீ. தொலைவில் கெபெமர் கடற்பகுதியில் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.