நடுவானில் பறந்து கொண்டிருந்த ஐதராபாத் - சென்னை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்திலிருந்த 192 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 198 பேரும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விமானம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.