டெல்லி பாரத் மண்டபத்தில் செப். 11 முதல் 13 வரை பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுகிறது.
இந்தியா 4-வது முறையாக இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதுடன், அமைப்பின் 20-வது ஆண்டாகவும் இது அமைகிறது. உறுப்பு மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னிட்டு, டெல்லியில் அரசு அலுவலகங்களுக்கு செப். 11 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.