கருவாட்டில் அதிகளவில் உப்பு சேர்க்கப்படுவதால், அதனை தொடர்ந்து உட்கொள்வது உடலில் சோடியத்தின் அளவை அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த தொடர்ச்சியான உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்துக்கள் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களை பாதித்து, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற தீவிர இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை உயர்த்துகின்றன.