மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், 137 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மருந்துகளின் உற்பத்தி விலைக்கும், விற்கப்படும் விலைக்கும் இடையே கொள்ளை லாபம் பெறுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இனி அதிகபட்ச லாபம் 30 சதவீதத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் புற்றுநோய் மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறையக்கூடும்.