மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நகரியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நாமக்கல்லில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.