ஈரோடு மாவட்டம் கோபி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 17 பேர் காயமடைந்தனர். எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் காரைத் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து பணியாளர்கள் மீது மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்த 17 பேரும் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.