கிழக்கு பகுதி நோக்கி வீசும் காற்று மாறுபாடு காரணமாக இன்று (நவ.5) இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்களில் மழை பெய்யும்.