சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், சேலம், திருச்சி, கடலூர், மதுரை, குமரி, நெல்லை, தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட 31 மாவட்டங்களில் இன்று (25.10.2026) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் என மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.