காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

29பார்த்தது
காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழையும், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி