நவம்பர் 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, ஆதார் இ-கேஒய்சி, முன்பதிவு இடைவெளி உள்ளிட்ட விவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மானிய விலையில் சிலிண்டர் பெற ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை. இண்டேன் வாடிக்கையாளர்கள் IndianOil ONE, பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் HelloBPCL, ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP PAY செயலிகள் மூலம் சரிபார்ப்பை முடிக்கலாம்.