ஜெம் வீரமணி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

10பார்த்தது
ஜெம் வீரமணி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் உள்ள ஜெம் வீரமணி தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு (SIT) முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. வீரமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கிற்கான குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது நிலுவையில் உள்ள மற்ற இரண்டு வழக்குகளிலும் அடுத்த 10 நாட்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என எஸ்.ஐ.டி. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி