
சென்னையில் போதைபொருள் விற்பனை: ஒரு வாரத்தில் 90பேர் கைது
சென்னையில் கடந்த 7 நாட்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 90 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 58 கிலோ கஞ்சா, 395 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 கிராம் கோகைன், 45 கிராம் ஓஜி கஞ்சா, 4 எல்எஸ்டி ஸ்டாம்புகள், அரை கிலோ கஞ்சா சாக்லேட்கள் மற்றும் 57,224 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.













