
அமைச்சருக்கு எதிராக போராட்டம்: மேயர் உட்பட 200பேர்மீது வழக்கு
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்பட 233 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், புரசைவாக்கத்தில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட 200க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.









