
ஆவின் பால் விநியோகம் குறைபாடு: விளக்கம்
சென்னை மெட்ரோ பகுதியில் அனைத்து வகையான பாக்கெட் பால்களை ஆவின் விற்பனை செய்து வருகிறது. ஒரு நாளைக்கு தோராயமாக 14.50 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பால் விநியோகம் 36 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது. எந்தவொரு பால் விற்பனையும் குறைக்கப்படவில்லை என்றும், வழக்கமான செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் நுகர்வோர் தேவைக்கேற்ப விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. நுகர்வோருக்குத் தடையின்றி பால் கிடைப்பதை உறுதி செய்வதில் ஆவின் உறுதியுடன் உள்ளது.







