
கொட்டிவாக்கம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (01.07.26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொட்டிவாக்கம், சாஸ்திரி நகர், வால்மீகி நகர், 2வது சீவார்டு சாலை முதல் 4வது சீவார்டு சாலை வரை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ, சுப்பிரமணியம் அவென்யூ, திருவள்ளுவர் நகர் 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













