மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எதிரிகள் வைக்கும் எந்தவொரு பொறியிலும் சிக்கிவிடாதீர்கள் எனத் தவெக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர்
விஜய் அறிவுறுத்தியுள்ளார். நமது கூட்டணியில் உள்ளவர்களைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நமக்கு எதிரானவை என்பதால் எதிரிகள் சூழ்ந்துள்ளனர் என்று அவர் கூறினார். எனவே
அரசியல் ரீதியான எந்த சர்ச்சையிலும் சிக்காமல் மிகுந்த விழிப்புடன் மக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.