முனைவர் கலையரசன் கைது செய்யப்பட்டதற்கு
மு.க.ஸ்டாலின் கண்டனம். விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக 'திராவிட மாடல்' ஆசிரியர் முனைவர் கலையரசன் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டிருப்பது தவெக அரசின் உச்சகட்ட பாசிசம் என
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். அவரை அலைக்கழித்துத் துன்புறுத்திய காவல்துறையின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த அவர், தமிழ்நாடு காவல்துறையும் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் கலையரசனிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.