பூந்தமல்லியில் CNG கேஸ் ஏற்றிச் சென்ற லாரியில் கசிவு

23பார்த்தது
பூந்தமல்லியில் CNG கேஸ் ஏற்றிச் சென்ற லாரியில் கசிவு
சென்னை பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த CNG கேஸ் ஏற்றி சென்ற லாரியில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. லாரியில் இருந்த சிலிண்டரிலிருந்து அதிக சத்தத்துடன் கேஸ் வெளியேறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனினும், லாரி ஓட்டுநர் பாதுகாப்பாக வால்வுகளை மூடியதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வாகனத்தை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி