
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி எம்.பி கைது
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (SIR) விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி நடத்தினர். நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆகாஷ்வாணி பவன் வளாகத்தில் காலையிலிருந்து தர்ணாவில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். நன்றி: PT































