
முதலமைச்சர் விஜய்க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு
உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, "உங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும், உங்கள் முதலமைச்சர் விஜய் சிறப்பாகச் செயல்படுகிறார்; அவரைப் பற்றி நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன" என நீதிபதி சஞ்சய் குமார் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. நீதிபதி சஞ்சீவ் சச்தேவாவும் இதனை ஆமோதித்ததாகக் கூறப்படுகிறது. தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதரவுப் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே இவரைப் போன்ற முதல்வர் இல்லை என நீதிபதிகள் பாராட்டியதை சுட்டிக்காட்டினார்.




