வீட்டு கட்டிலில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி

38பார்த்தது
வீட்டு கட்டிலில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி
நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த மாணவி கட்டிலில் சடலமாக கிடப்பதைக் கண்டு, பெற்றோர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மாணவியின் கழுத்தில் சிவப்பு நிற வடுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் இருந்த 20 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணமும் மாயமாகியுள்ளதால் கொள்ளை முயற்சிக்கிடையே மாணவி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி