காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நன்கொடை வருவாய் 75 சதவீதம் சரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி தாக்கல் செய்த கணக்கின்படி, ரூ.130.69 கோடி மட்டுமே நன்கொடையாகக் கிடைத்துள்ளது. அதே காலகட்டத்தில்,
பாஜக இதைவிட சுமார் 12 மடங்கு அதிகமாக ரூ.6,074.02 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இரு தேசியக் கட்சிகளுக்கும் இடையிலான நன்கொடை அளவில் ஏற்பட்டுள்ள இந்தப் பெரிய வித்தியாசம்
அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.