மதுரை நீதிமன்றத்தில் இருந்து தண்டனைக் கைதி தப்பியோட்டம்

7பார்த்தது
மதுரை நீதிமன்றத்தில் இருந்து தண்டனைக் கைதி தப்பியோட்டம்
மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் இன்று (நவ.12) தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சேர்ந்த ராஜா என்பவர் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி