டெல்லியில் ஓடும் பேருந்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெறும் பாலியல் குற்றங்கள், போலீஸ் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தது.