தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியில் மருந்தகத்திற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடந்து வீடு திரும்பிய முதியவரை, வீட்டின் அருகே சாலையில் நின்றிருந்த இரண்டு மாடுகள் திடீரென ஆக்ரோஷமாக முட்டித் தள்ளி மிதித்துவிட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.