கிரிக்கெட் வீராங்கனை சப்பினேனி மேகனா ஓய்வு

8பார்த்தது
கிரிக்கெட் வீராங்கனை சப்பினேனி மேகனா ஓய்வு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான சப்பினேனி மேகனா, அனைத்து வகையான சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 3 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2022-ல் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணியிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், 2024-ல் ஆர்சிபி (RCB) அணி மகளிர் பிரீமியர் லீக்கில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றபோதும் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி