தனுஷின் 'ஓம்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் நெரிசல்

0பார்த்தது
சென்னை அருகே தாம்பரத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட பாடல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அரங்கிற்குள் ரசிகர்களைப் போலீசார் வரிசையாக அனுப்பி வந்த போதிலும், நுழைவு வாயில் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பெரும் பரபரப்பு நிலவியது. நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி