கச்சா எண்ணெய் விலை இன்று மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வந்ததோடு, தங்கம், வெள்ளி விலை ஏற ஆரம்பித்தது. இதனிடையே நேற்று பிரெண்ட் கச்சா எண்ணெய் 93 டாலர்களில் வர்த்தகமான நிலையில், இன்று 99 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 115 டாலர்களில் வர்த்தகமான பிரெண்ட் கச்சா எண்ணெய், 93 டாலர் வரை குறைந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதே போல் தங்கம், வெள்ளி விலை சரிந்து வருகிறது.