மாசுபாட்டைக் குற
ைப்பதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்
கு மிகச்சிறந்த வழிகளில், சூரிய ஆற்றலும் ஒன்றாகும். சூரிய ஆற்றலைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான புதிய யோசனைகளையும் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். அத்தகைய அற்புதமான கண்டுப
ிடிப்புகளில் ஒன்று 'சூரிய மரம்' (Solar Tree). இதனை CSIR-CMERI நிறுவனம் உருவாக்கியுள்ளது. துர்காபூரில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில் இது நிறுவப்பட்டுள்ளது.