சென்னையில் இருந்து 600 கிமீ தொலையில் அக்வான் புயல் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்று மாலை முதல் இரவுக்குள் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். மணிக்கு 3 கிமீ வேகத்தில் நகரும் புயலானது, நாளை மறுநாள் (நவ., 19) காலைக்குள் மிகத் தீவிர புயலாக வலுப்பெறும். வரும் 20ஆம் தேதி மதியம் ஆந்திராவின் நெல்லூருக்கும், விசாகப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.