அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.1) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா பரிந்துரைத்த பெயரான ‘முரசு’ என இந்தப் புயல் அழைக்கப்படும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 3-ம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.