போலந்து நாட்டில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 5 பேர் உயிரிழப்பு

9பார்த்தது
போலந்து நாட்டில் பயங்கர துப்பாக்கிச் சூடு.. 5 பேர் உயிரிழப்பு
போலந்து நாட்டின் கிராகோவ் நகர மையப் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய மர்ம நபர், பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தி, அந்த நபரைச் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி