மீன்களுக்கு மறுவாழ்வு கொடுத்த டெல்லி தம்பதி

12பார்த்தது
ராமநாதபுரம் தனுஷ்கோடி கடற்கரையில் டெல்லியைச் சேர்ந்த தம்பதியினர் மேற்கொண்ட மனிதாபிமான செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மீனவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடையுள்ள உயிரோடு இருந்த மீன்களை, 500 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினர். பின்னர், அந்த மீன்களை மீண்டும் கடலிலேயே பத்திரமாக விட்டு அவற்றிற்கு வாழ்வளித்தனர். உயிரினங்கள் மீதான இவர்களின் இந்த அன்பான செயலையும், கருணையையும் கண்டு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி