'ராயன்' திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க
இசையமைப்பாளர் தேவாவிடம் நடிகர்
தனுஷ் கேட்டுள்ளார். தனக்கு நடிப்பு வராது என தேவா மறுத்ததால் அதன் பின் அந்த வாய்ப்பு எஸ்.ஜே.சூர்யாவுக்கு சென்றுள்ளது. 'ஏன் என்னை தேர்வு செய்தீர்கள்?' என தனுஷிடம் கேட்டபோது, 'நீங்கள்தான் சென்னை ஸ்லாங் சிறப்பாக பேசுவீர்கள்' என்று
தனுஷ் கூறியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தேவா கூறியுள்ளார். தேவா 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்', 'மோதி விளையாடு' படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.