சென்னையில் தனது ரசிகர் மன்ற மகளிரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் இன்று (அக்.25) நடிகர்
தனுஷ் பங்கேற்றார். இதில் கலந்துகொண்ட மகளிருக்கு வெள்ளி விளக்குகளைப் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே பேசிய
தனுஷ், “உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்” என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.