நடிகர் மம்முட்டியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்
தனுஷ், சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா நடிக்கும் இத்திரைப்படத்தில் 'பர்மா கார்த்திகேயன்' என்ற கடத்தல்காரர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.