தீபாவளி உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

23பார்த்தது
தீபாவளி உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தீபாவளி பண்டிகையையொட்டி உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை ஆட்சியர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ளார். அதில், பொதுமக்கள் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு ரசீது பெற வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தயாரிப்பு தேதி, காலாவதி தேதி விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பலகாரங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய், நெய் விவரங்களை தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி