தீபாவளி மொபைல் விற்பனை 20% வரை சரிவு

26பார்த்தது
தீபாவளி மொபைல் விற்பனை 20% வரை சரிவு
இந்தியாவில் 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது நேரடி விற்பனைக் கடைகளில் மொபைல் போன் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 முதல் 20 சதவீதம் வரை சரிந்துள்ளதாக அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (AIMRA) தெரிவித்துள்ளது. கடைகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை சீராக இருந்தபோதிலும், மொபைல் போன்களின் விலை உயர்வு காரணமாகப் பெரும்பாலானோர் வாங்கும் முடிவைத் தவிர்த்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி