பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு
திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்,
திமுக -
பாஜக கூட்டணி வைப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு
திமுக ஆதரவு அளித்தது நாட்டிற்கு நல்ல செயல்” எனக் குறிப்பிட்டார். மேலும், “
திமுக -
பாஜக கூட்டணி அமைவது முருகப்பெருமானின் கையில் உள்ளது" என பதிலளித்தார்.