தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான கனிமொழி, டி.ஆர். பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பான திமுகவின் நிலைப்பாடு மற்றும் கோரிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.