உதயநிதியை நேரில் சந்திக்கச் சென்றால் நீண்ட நேரம் காக்க வைப்பதாகவும், முக்கியக் கூட்டத்தில் இருப்பார் என நினைத்தால் சினிமா பிரபலங்களுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும்
திமுக இளைஞரணியினர் அதிருப்தி தெரிவிப்பதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராகக் களத்தில் இறங்கி போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையையும் அவர் கண்டுகொள்வதில்லை எனக் கூறுகின்றனர். தந்தையைவிடத் தீவிரமாக உழைக்க வேண்டும் என்பதை உதயநிதி உணர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.