டெஃப்ளான் பூச்சு கொண்ட நான்ஸ்டிக் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து சுமார் 9,100 பிளாஸ்டிக் துகள்கள் வெளியேறக்கூடும் என 'Science of the Total Environment' இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல், பூச்சு கடுமையாகச் சேதமடைந்தால் 23 லட்சம் வரை மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நானோபிளாஸ்டிக் துகள்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்த கவனம் அதிகரித்துள்ளது.