போதைப்பொருள் இல்லாத இந்தியா உருவாக்கப்படும்: அமித் ஷா உறுதி

1448பார்த்தது
போதைப்பொருள் இல்லாத இந்தியா உருவாக்கப்படும்: அமித் ஷா உறுதி
2029-ம் ஆண்டிற்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான விரிவான செயல்திட்டம் தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இது குறித்து கோவாவில் பேட்டியளித்த அவர், நக்சல் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் காட்டிய அதே தீவிரத்தன்மையுடன் போதைப்பொருளுக்கு எதிராகவும் அரசு தேசிய பாதுகாப்பு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், போதைப்பொருள் இல்லா இளைஞர் சக்தியே உருவாக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடையும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி