தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினருக்கு இன்று (நவ.15) டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் யாரேனும் போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அதேபோல், ஒரு காவல் நிலைய எல்லைக்குள் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்” என எச்சரித்துள்ளார்.